இது ‘கண்ணானே கண்ணனே’ பாடலின் அம்மா – பையன் வெர்ஷன்- பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்ட உருக்கமான வீடியோ.

0
2351
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
Reshma Pasupuleti Age, Boyfriend, Family, Biography & More ...

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல நடிகை ரேஷ்மா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் நடிகை ரேஷ்மாவின் மகன் அவருக்கு காபி போட்டுக் கொடுக்கிறார். அவ்வீடியோவுடன் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ என்ற பாடலின் ஆடியோவையும் இணைத்து எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. 2016-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. விஷ்ணு ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரேஷ்மா ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். அதன் பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-யில் நடிகை ரேஷ்மாவும் ஒரு போட்டியாளராக இருந்தார். ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகை ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் அதிகமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement