உன்ன நான் பிக் பாஸ் அனுப்பி இருக்க கூடாது – ரியோ மனைவி சுருதி உருக்கம்.

0
62715
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ரியோவும் ஒருவர். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தொடங்கி தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின், ரக்சன் வரை தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டனர். அந்த வகையில் தற்போது சினிமாவின் நியூ என்ட்ரியாக வருகை தந்திருப்பவர் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ்.

-விளம்பரம்-
Rio Raj (Bigg Boss Tamil 4) Wiki, Age, Family, Images - TamilGlitz

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரியோ. கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார். அதன் பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் ரியோ. ரியோ, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீஸனில் நடித்திருந்தார்.

- Advertisement -

எதிர்பார்த்தது போல அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதை தொடர்ந்து சினிமாவில்இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் ரியோ. அந்த திரைப்படம் ஓரளவிற்கு வெற்றியை அடைந்திருந்தது.நடிகர் ரியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரியோ வீஜேவாக அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே ஸ்ருதியைத் தெரியும். ரெண்டு பேரும் நண்பர்கள்.

சமீபத்தில் தான் ரியோவிற்கு பெண் குழந்தை கூட பிறந்தது. இப்படி ஒரு நிலையில் ரியோவை எண்ணி அவரது மனைவி சுருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், ஒருவேளை நான் உன்னை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்க கூடாது இது நமக்கானது அல்ல என்று தெரியவில்லை என்ன நடந்தாலும் உனக்காக நான் இருக்கிறேன் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும் உனக்காக இருப்பேன் என்று உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement