என் கணவர் கோமாளி என்பதை நினைத்து பெருமையடைகிறேன், ஏனென்றால் – ரியோ மனைவி உருக்கமான பதிவு.

0
9348
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ரியோவும் ஒருவர். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தொடங்கி தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின், ரக்சன் வரை தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டனர். அந்த வகையில் தற்போது சினிமாவின் நியூ என்ட்ரியாக வருகை தந்திருப்பவர் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ்.

-விளம்பரம்-

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீஸனில் நடித்திருந்தார்.எதிர்பார்த்தது போல அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதை தொடர்ந்து சினிமாவில்இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் ரியோ. அந்த திரைப்படம் ஓரளவிற்கு வெற்றியை அடைந்திருந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸில் கலந்து கொண்டார்.

- Advertisement -

ஆரம்பத்தில் ரியோவிற்கு பெரும் ஆதரவு இருந்து வந்தது. ஆனால், எப்போது அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாரோ அப்போதே ரியோவின் தனித்துவம் போய்விட்டது என்று ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ செய்த பல செயல்களை கேலி செய்து பல்வேறு விதமான மீம்களும் வந்த வண்ணம் இருக்கிறது. அதே போல இருக்கு பல மீம்களை உருவாகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தனது கணவரை கோமாளி என்று கிண்டல் செய்பவர்களுக்கு ரியோவில் மனைவி ஸ்ருதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-186.jpg

அதில், என் கணவரை கோமாளி என்று கூறி அவரை மட்டுப்படுத்த சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள் அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் மற்றவர்களை சிரிக்க வைக்க தன்னுள் இருக்கும் வலிகளை மறைத்து இருக்கும் ஒரு நபரை காதலிப்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன் உங்களை வெறுப்பவர்களை எல்லாம் தாண்டி நிச்சயம் நீங்கள் ஜொலிப்பீர்கள் கோமாளியாக இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருங்கள் என்று உருக்கமுடன் பதிவிட்டு இருக்கிறார் ஸ்ருதி

-விளம்பரம்-
Advertisement