இந்த நடிகர் மீது தான் க்ரஷ். ரைசாவை தொடர்ந்து ஓப்பனாக கூறிய ரித்விகா. இவங்களுமா.

By ·

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதலுக்கும் கிசுகிசு விற்கும் வஞ்சமே இருந்தது கிடையாது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்துள்ளது. இந்த 3 சீசன்களிலும் ஏகப்பட்ட காதல் கதைகள் ஓடியது. ஆனால், ஒரு சில பெண் போட்டியாளர்கள் மட்டுமே இவ்வாறான சர்ச்சைகளில் இருந்து தப்பித்து விட்டார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன ரித்விகாவின் ஒருவர். ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரித்விகா பிரபல நடிகர் மீது தனக்கு க்ரஷ் இருந்ததாக கூறியுள்ளார்.

நடிகை ரித்திகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இதையும் பாருங்க : இளைய தளபதி விஜய் மீது இருந்த பல வருட வழக்கு. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பெயர் சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குண்டு திரைப்படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லைபடவாய்ப்புகள் இல்லை என்றாலும் அடிக்கடி கடை திறப்பு விழா பொது நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்து வரும் ரித்திகா. சமீபத்தில் குண்டு படத்தின் விளம்பரத்திற்காக பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார் அப்போது அவரிடம் சினிமா துறையில் உங்களுக்கு யார் என்று கேட்டதற்கு விஜய் சேதுபதி என்று பதிலளித்துள்ளார் ரித்திகா.

அதேபோல பழம்பெரும் நடிகரான ஜெய்சங்கர் மீதும் ஒரு மிகப்பெரிய கிராஷ் இருந்ததாகவும் கூறியுள்ளார் ரித்விகா. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைசா அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக ஒரு இருந்தது பெரும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகை ரித்திகா இந்த விஷயத்தில் மிகவும் சாமர்த்தியமாக பதில் அளித்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full