இளைய தளபதி விஜய் மீது இருந்த பல வருட வழக்கு. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

0
4986
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான் ஆகவும், வசூலில் மன்னனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது. இது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான கத்தி திரைப் படத்தின் மீது போடப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வந்து உள்ளது என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் எல்லாரும் பயங்கர ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். தளபதி விஜய் அவர்களின் படம் என்றாலே சர்ச்சை தான். அவருடைய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பத்திலிருந்து தியேட்டர்களுக்கு வெளியாகும் வரை பிரச்சனை, கலவரங்களும் பஞ்சம் இல்லை. ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய படம் மாஸ் காட்டும்.

-விளம்பரம்-
Image result for murugadoss and Vijay

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் படத்தில் நாட்டு மக்களுக்கு உபயோகமாக ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக பல விஷயங்களைக் கொண்டு வருவார். இதனாலே படங்கள் சிக்கலில் மாட்டி கொள்ளும். அப்படி இருந்தாலும் அவருடைய படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்த படம் “கத்தி”. இந்த படத்தில் விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க விவசாயங்கள் பற்றியும், விவசாயிகளின் கஷ்ட நிலைகளைப் பற்றியும் கூறும் கதையாகும்.

இதையும் பாருங்க : குளியல் தொட்டியில் பிகினி உடையில் போஸ். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷாலினி பாண்டே.

இந்த படம் தியேட்டர்களில் வெளியான போது பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதில் ஒரு பிரச்சனை என்னவென்று பார்த்தால் உதவி இயக்குனர் ஒருவர் இந்த படம் என் கதையில் இருந்து திருடியது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் அதிர்ந்து போனார்கள். அதோடு காவலன் படத்தில் இருந்தே விஜய் படங்களுக்கு பல தடைகளும், சர்ச்சைகளும் தொடர ஆரம்பித்து விட்டது. இயக்குனர் ராஜசேகர் என்பவர் தன்னுடைய ‘தாகபூமி’ என்ற குறும் படத்தை தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் விஜய்யை வைத்து கத்தி என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கிற்கு மதுரை கிளை நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-
அன்பு ராஜசேகர்
தாக பூமி குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர், கத்தி படத்தை எதிர்த்து விரதமிருந்த போது

அதன் மூலம் இந்த வழக்கில் இருந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், படத்தின் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல பேரை விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பு வந்தது. இந்தப் படம் வெளியாகி ஐந்து வருடத்திற்கு மேல் ஆனது. ஆனால், தீர்ப்பு இப்போ தான் கிடைத்தது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் “தளபதி 64” என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த தளபதி 64 படத்தில் நட்சத்திர பட்டாளங்களே நடிக்கிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.

Advertisement