கடைசி நேரத்தில் மாறிய ஓட்டிங், நூலிழையில் தப்பித்த போட்டியாளர் – கடைசியில் வெளியேறிய போட்டியாளர்.

0
732
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆறாவது எவிக்ஷனில் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 47 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
kamal

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 6 போட்டியாளர்கள் போக தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. இதனால் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்.

robert

இந்நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற இருக்கிறார். அதோடு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். அதனால் இன்னும் ஒரு நபர் யார் என்று தெரியவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் யார் வெளியே போகிறார் என்பது தெரிந்து விடும்.

Advertisement