ரச்சிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட், Giftஐ திருப்பி அனுப்பிய அவரின் இளம் காதலி – Break Up ஆகிவிடுமோ என்ற பயத்தில் புலம்பிய ராபர்ட்.

0
313
robertmaster
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சிலுமிசம் செய்து வந்த அசல் கோளாறு வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக தன்னுடைய லீலையை காட்டி வந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 41 நாட்கள் கடந்த நிலையில் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது. இதற்க்கு முந்தய பிக் பாஸ் சீசன்களில் பிக் பாஸ் கொடுக்கு டாஸ்களுக்கு இடையே சண்டை இருந்தது. ஆனால் இந்த பிக் பாஸ் சீசன் எப்போதுமே சண்டையாக செய்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
robert

இந்நிலையில் ஏற்கனனே 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 6வது போட்டியாளராக நிவாஷினி வெளியேறியுள்ளார். இதனையடுத்து 15 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் இந்த வீட்டில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக மேலும் ஒரு வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜி.பி.முத்து அல்லது அசல் கோளாறு உள்ளே வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மற்ற சீசன்களை போல இந்த சீசனும் காதல் ஜோடிகளாக அசல் கோளாறு நிவாஷினி இருந்தனர். ஆனால் அசல் கோளாறு சென்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் அளவிற்கு தற்போது ரட்சித்தாவிடம் தனது சிலுமிசங்களை செய்து வருபவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது தான் வெற்றியடைய வரவில்லை வேறு ஒரு விஷியத்திற்காக வந்திருப்பதாக கூறினார். இதனையடுத்து முதல் டாக்கிலே ரட்சித்தாவிடம் “நம்முடைய இந்த நட்பு வெளியில் சென்றும் தொடர வேண்டும்” என்று கூறியது பல விமர்ச்சனத்திற்கு உள்ளாகியது.

இந்நிலையில் ரட்சித்தாவிடம் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்த அவரின் கணவர் தினேஷ் ஏற்கனவே இந்த விஷியத்தை பற்றி ராபர்ட் மாஸ்டரை கடுமையாக திட்டியிருந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் ரட்சிதா எங்கே சென்றாலும் அவர் கூடவே அலைந்து வந்த ராபர்ட் மாஸ்டரை மேலும் குஷி படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் ராஜா ராணியாக அருங்கட்சியகம் டாஸ்கில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

-விளம்பரம்-

இதனால் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் செய்யும் லீலைகள் மேலும் அதிகமாகியது. அதிலும் ரட்சித்தாவின் கையை பிடித்து பாகுபலி படத்தில் வில் விடுவது போலவும், வீட்டிற்கு வெளியில் நடனமாடும் போது ரட்சிதாவை தொட்டு ஆடியதெல்லாம் ரசிகர்கள் மட்டுமல்ல ரட்சித்தாவே முகம் சுளிக்கும் படியானது.ராபர்ட் மாஸ்டர் முன்பு பேசிக்கொண்டிருக்கும் போது தனக்கு இளம் வயதில் காதலி ஒருவர் வெளியில் உள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு பொருள் வந்தது. அதில் ராபர்ட் மாஸ்டர் வெளியில் இருக்கும் போது தன்னுடைய காதலிக்கு வாங்கி கொடுத்த மோதிரத்தை அனுப்பு தன்னுடைய காதல் முறிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை பற்றி குயின்ஸியுடன் ராபர்ட் மாஸ்டர் பேசிய விடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவின் கமெண்டில் நீங்கள் ரட்சித்தாவிடம் நெருக்கம் காட்டினீர்கள் அதுதான் உங்களுடைய காதலி உங்களுக்கு தாட்டா காட்டிவிட்டார் என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். உண்மையில் ராபர்ட் காதலி காதலை முறித்துக்கொண்டாரா ? இல்லை தனது நினைவாக அந்த மோத்திரைத்தை அனுப்பி வைத்து இருக்கிறாரா என்பது ராபர்ட் மாஸ்டருக்கே புரியாத ஒரு புதிராக இருக்கிறது.

Advertisement