‘இந்த தீவுக்கு போனவங்க யாரும் உயிரோட திரும்புதனு இல்ல’ – பழங்குடி மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக விளக்கும் ‘புதர்’

0
457
robert
- Advertisement -

பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் புதர் படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவரின் முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடன இயக்குனராக கொடி கட்டி பறந்து இருந்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வராததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு ராபர்ட் மாஸ்டர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட்:

மேலும், காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருந்தார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன் விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தார். இதனால் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. மேலும், குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.

ராபர்ட் மாஸ்டர் நடித்த படம்:

ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இறுதிவரை வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ரக்ஷிதா பின் சுற்றிக்கொண்டு செய்த சேட்டைகளால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வெளியேறி விட்டார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள புதர் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

-விளம்பரம்-

புதர் படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை டாக்டர் அகஸ்டின் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சென்டினல் மக்கள் பற்றிய கதையாக இந்த படம் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் பழங்குடியினரைச் சேர்ந்த கோக்ரி (கோபாலகிருஷ்ணன்) என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தின் ரிலீஸ்:

இவர்களுடன் படத்தில் ராபர்ட் மாஸ்டர் நடித்து இருக்கிறார். இந்த படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைக்குள் அப்பால் உள்ள குருபா தீவில் எடுக்கப்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement