செமையா பிக்கப் பன்றாருயா – ரஷிதாவை Impress செய்ய ராபர்ட் மாஸ்டர் செய்த விஷயம். வைரலாகும் வீடியோ.

0
499
robert
- Advertisement -

‘நான் உன்னை காப்பாற்றுகிறேன்’ என்று ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காம் வாரம் துவங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். அதன் பின் இரண்டாம் எவிக்ஷனில் அசல் வெளியேறி இருந்தார். இது ஒருபக்கம் இருக்க, இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான்.

ராபர்ட் மாஸ்டர் லீலைகள்:

இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ரக்ஷிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் சொன்னது:

அதற்கு ரக்ஷிதா, நம்ம உள்ள வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக தப்பித்து விட்டார். பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

வைரலாகும் ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா வீடியோ:

அதாவது, ரக்ஷிதா சாதம் வடித்து கொண்டிருக்கும் போது அந்த கஞ்சி தண்ணீரில் இருந்து புகை வெளியே வந்தது. உடனே, ராபர்ட் மாஸ்டர் கையில் தடுத்து நான் உன்னை காப்பாற்றுகிறேன் என்று கூறியிருந்தார். இதை சிவன் பார்த்துவிட்டு என்ன மாஸ்டர் பண்றீங்க? என்றெல்லாம் கிண்டல் செய்திருந்தார். இப்படி ரக்ஷிதாவையே சுற்றி சுற்றி ராபர்ட் மாஸ்டர் வட்டமிடம் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்களும் ‘ராபிதா’ என்ற ஹாஸ்டேக்குகளை உருவாக்கி ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement