பிக் பாஸ் 6ல் கலந்துகொள்வதை வீடியோ மூலம் சூசகப்படுத்திய வனிதாவின் Ex ராபர்ட் மாஸ்டர்.

0
605
robert
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்யும் விதமாக வனிதாவின் முன்னாள் கணவரே வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது.

-விளம்பரம்-

இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

biggboss6

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது. நடன இயக்குனர் ராபர்ட், நடிகை ரக்ஷிதா, விசித்ரா, ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா, சோசியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார், நடிகை ஜாக்குலின், தீபா சங்கர், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகர் மகேஷ், சமீபத்தில் நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்த ரவீந்தர், அமுதவாணன், ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகை ஆயிஷா என பல பேர் அடிபட்டு வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதை மாஸ்டர் ராபர்ட் உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட்.

ராபர்ட் வெளியிட்ட வீடியோ:

இன்னும் சொல்லப்போனால் வத்திக்குச்சி வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார். தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் சீசன் 6ல் பங்கேற்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதற்காக இவர் குவாரன்டைனில் இருக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவரை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும்.

Advertisement