காப்பாத்துங்க, ஹோட்டலில் அலறி ஓடிய‌ சுசித்ரா. பிக் பாஸ்ஸிற்காக தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு.

0
12517
suchi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மூன்றாவது வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது இதுவரை ரேகா மட்டும் வெளியேறி இருக்கும் நிலை இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா உள்ளே நுழைந்தார். பொதுவாக வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்த பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்கும். ஆனால் அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளரராக உள்ளே நுழைந்த பின்னர் அப்படி எதுவும் பெரிய சம்பவம் நடக்கவில்லை.

-விளம்பரம்-

அதேபோல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த ஒரு சில நாட்களிலேயே இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் யார் இரண்டாவது வைல்டுக் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா இந்த சீசனில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.

சுசித்ரா பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சுசித்ரா, தான் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் சுசித்ரா, தங்கி இருந்த அறையில் இருந்து ‘என்னைக் கொலை செய்ய வர்றாங்க, காப்பாத்துங்க’னு கத்திக்கிட்டே ரிசப்ஷனுக்கு ஓடி வந்தாங்கவும் ‘யார், என்ன’னு விசாரிச்சா, யாரோ ரூம் கதவைத் தட்டினதா சொன்னாதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளாராம். இது குறித்து சேனல் தரப்பிற்கு தகவல் தெரிவிக்க, அங்கிருந்து சிலர் வந்து பேசிய பிறகே சமாதானமாகி நள்ளிரவுக்குப் பிறகு தனது அறைக்குத் திரும்பியிருக்கிறார் சுசித்ரா என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement