மன்னிப்பு கேட்ட கவின்.! நோஸ்கட் செய்த சாக்க்ஷியின் தந்தை.! துள்ளி குதித்த சாக்க்ஷி.!

0
8407
Kavin

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாளை பூர்த்தி செய்துள்ளது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு இருந்தார் அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் இவர் நேரடியாகவே வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் மோசமான பெயரையே பெற்றிருந்தார். எப்போதும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது, அடிக்கடி ஏதாவது சண்டை வரும்படி பேசுவது என்று இருந்து வந்த சாக்ஷிக்கு ரசிகர்கள் விஷம் என்றும் பெயர் வைத்திருந்தனர். அதிலும் கவின் விஷயத்தில் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த சாக்க்ஷி அதன் பின்னர் அவரைப் பற்றியே புறம் பேசி கொணடே இருந்தார். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் மேடையில் பேசிக்கொண்டிருந்த சாக்க்ஷி ஹவுஸ் மெட்ஸ்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சாக்க்ஷியிடம் மன்னிப்பு கேட்டார் கவின்.

மேலும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்த சாக்க்ஷியின் தந்தையிடமும் மன்னிப்பு கேட்டார் கவின். அதற்கு சாக்க்ஷியின் அப்பாவோ எதற்கு சாரி சொல்றீங்க நீங்க உங்க கேம் தான் விளையாடுறேன்னு சொன்னீங்க. ஹர்ட் பண்ண மாதிரி எனக்கு தெரியல” என கூறினார் அவர் சொன்னதும் இதான் என் அப்பா என்று சாக்க்ஷி மேடையிலேயே துள்ளி குதித்தார். இதனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார் கவின்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.