சதைக்காக அலைபவர் கவின்.! மோசமான டீவீட்டால் சர்ச்சையில் சிக்கிய சாக்க்ஷி.!

0
9687
sakshi
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வா ல்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார். ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

இதையும் பாருங்க : நடிகை அம்பிகாவின் மகன் இந்த படத்தின் நடிகரா.! யாருனு தெரியுமா.!

- Advertisement -

இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர். இதனால் கவின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. அதே போல புக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதும், உன்னுடைய உறவு முறிந்து விட்டது என்பதை எண்ணி நான் சந்தோசபடுகிறேன் என்று கவினிடம் கூறிவிட்டு வந்தார் சாக்க்ஷி. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் கவின் ஆர்மியின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார் சாக்க்ஷி . இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடை திறப்பு விழா, கல்லூரி விழா என்று படு பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த சாக்க்ஷி, லாஸ்லியாவை கட்டி தழுவி அன்பை பரிமாறி இருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர், கவின் குறித்து விமர்சித்து மோசமான ட்வீட் ஒன்றை செய்திருந்தனர். அதில், சாக்க்ஷி , பாலசந்தர் படத்தில் வருபவர் போல தான். அவர் லாஸ்லியா ஒரு பச்சோந்தி என்றும், கவின் இளம் சதைக்கு அலையும் ஒரு வர்க்க குணம் கொண்டவர் என்று ரசிகர்கள் உணர்வதற்கு முன்பாக சாக்க்ஷி அதனை கண்டுபிடித்துவிட்டார். நீங்கள் மிகவும் புத்திசாலி என்று கூறியுள்ளார்.

இந்த டீவீட்டை சாக்க்ஷி ஆதரிப்பது போல அந்த டீவீட்டை லைக் செய்து சிரிப்பது போன்ற எமோஜி ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.சாக்க்ஷியின் இந்த செயலை கண்ட பலரும் சாக்க்ஷியை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், உங்களுக்கு கவினை பிடிக்கவில்லை என்றாலும் இது போன்ற கேவலமான ட்வீட்களை எல்லாம் லைக் செய்யதீர்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர். இதனால் சாக்க்ஷி அந்த டீவீட்டை நீக்கிவிட்டார்.

Advertisement