வைரலாகும் சாக்க்ஷியின் வீடியோ.. கடைசில இவங்களையும் இப்படி மாத்திட்டாங்களே..

0
74777
Sakshi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். அதோடு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா துறையில் அறிமுகமானவர். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.அதைவிட அதிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரொம்ப பிரபலமாகிவிட்டார் என்றுகூட சொல்லலாம்.ஏன்னா! அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தியதில் சகுனிக்கு அப்புறம் சாக்ஷின்னு கூட சொல்லுவாங்க. தற்போது சமூகவலைத்தளங்களில் சாக்ஷி பாடிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.அது பிக்பாஸ் வீட்டில் சாண்டி, கவின் பாடிய பாடலை திருத்தம் செய்து பாடியுள்ள வீடியோ தான்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சாக்ஸி பத்தி கேட்டா போதும் அவரை திட்டாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் வேலைகளை செய்துள்ளார் . இவங்க பேசுவதை அவங்க கிட்ட ,அவங்க பேசுவதை இவங்க கிட்ட என்று மாறி, மாறி புறம் சொல்லி கொண்டு வந்து இருந்தார். மேலும், இல்லாததையும், பொல்லாததையும் ஒன்னுக்கு ரெண்டா பேசி வீட்டையே ரெண்டாகிட்டாங்க என்று சொல்லலாம். இதனாலேயே சாக்ஷிக்கு ‘கோல் மூட்டி’ என்ற பட்டப் பெயரை வைத்து உள்ளார்கள். சாக்க்ஷி எல்லாம் சொல்றதெல்லாம் சொல்லிவிட்டு கடைசில நான் அப்படியெல்லாம் சொல்லலையேன்னு அப்படியே பல்டி அடிப்பாங்க.

இதையும் பாருங்க : அஜித்துடன் ரெட் படத்தில் நடித்த நடிகையா இது..இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் போது கூட ஷெரின் பிரச்சினைல அப்படித்தான் செஞ்சாங்க சாக்ஷி. இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் தன்னைக் காதலிக்கிறார் என்று பெரும் கலவரத்தையே ஏற்படுத்தி விட்டார். இதனாலேயே மக்கள் கடுப்பாகி சாக்ஷியை சமூக வலைத்தளங்களில் ஸ்னேக்ஷி, விஷம், பாய்சன், பச்சோந்தி என்றெல்லாம் பெயர்களை வைத்து அழைத்து வந்தார்கள். கவின் இமேஜையும் ஸ்பாயில் பண்ணினார் சாக்ஷி. மேலும், பிக்பாஸ் வீடு சோகத்தில் மூழ்கியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டை மாற்றினார் சாக்ஷி. இதை தாங்க முடியாமல் சாண்டி,கவின் இருவரும் உட்கார்ந்து இருக்கும் போது ” மனசு வலிக்குது அவ்வா.. அவ்வா.., மனசு துடிக்குது அவ்வா.. அவ்வா..” என்ற ஒரு பாட்டு பாடி வந்ததார்கள். இவர்கள் பாடும் பாட்டு என்னை கிண்டல் பண்ணி தான் பாடுறாங்கன்னு மற்ற போட்டியாளர்களிடம் பாடிக்காட்டினார். இதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் இந்த அவ்வ அவ்வ காட்சியை பலரும் டிக் டாக் செய்து படு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது சாக்க்ஷியே தனது வசனத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அப்போதிலிருந்து சாக்ஸி என்ன பேசினாலும், தனது டுவிட்டர் பக்கத்தில் என்ன கூறினாலும் ரசிகர்கள் மனசு வலிக்குது அவ்வா அவ்வா, மனசு துடிக்குது என்று கிண்டல் கேலி செய்து வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சாக்ஷி அவர்கள் பாடிய பாடலை உல்டா பண்ணி சந்தோசமா இருக்கும் போது பாடினால் எப்படி இருக்கும் என்று வீடியோ பதிவு செய்துள்ளது. அது ” மனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா… அவ்வா… என ஜாலியாக பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சாக்ஷி வீடியோக்கு லைக் போட்டது மட்டுமில்லாமல் கமெண்டும் அடித்துள்ளார்கள். அதிலும் ஒரு சில பேர் இந்த வீடியோவை கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள். அவருடைய வீடியோவுக்கு ஒரு சில பேர் பாம்பு படத்தையும், பச்சோந்தி படத்தையும் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement