இதுங்களுக்கெல்லாம் தகுதியே இல்ல, இந்த மூணும் அப்போவே போய் இருக்கணும் – அர்ச்சனா மற்றும் சம்யுக்தாவின் Unseen வீடியோ.

0
6863
archana
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வரமாகவே குரூப்பீசம் பற்றி பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, ரியோ, சோம், ஜித்தன் ரமேஷ், கேப்ரில்லா ஆகியோர் ஒரு குரூப்பாகவும் பாலாஜி, ஆஜீத், சம்யுக்தா, ஷிவானி ஆகியோர் ஒரு குரூப்பாகவும் இருந்து வருகின்றனர். இதில் அர்ச்சனா குரூப்பை வேல் குரூப் என்று அவர்களே சொன்னார்கள். இந்த குரூப்பில் அர்ச்சனா தான் தலைவராக இருந்து வருகிறார். அவர் ஆட்டி வைப்பது போலத் தான் மற்றவர்கள் ஆடுகிறர்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கால் சென்டரில் இருக்கும் நபர்களுக்கு வீட்டில் உள்ள யார் வேண்டுமானலும் போன் செய்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் முதல் அழைப்பாக பாலாஜிக்கு அர்ச்சனா கால் செய்து இருந்தார். மேலும், அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாஜி பொறுமையாக பதில் கூறியதால் அர்ச்சனா அடுத்த வாரம் நாமினேட் ஆனார்.

- Advertisement -

உண்மையில் பாலாஜியை காப்பாற்ற அர்ச்சனா ஏற்கனவே திட்டம் தீட்டி இருக்கிறார் என்பது Unseen வீடியோவில் வெளிச்சமாகி இருக்கிறது. அதில் இந்த டாஸ்க்கிற்கு முன்பாக அர்ச்சனா, சம்யுக்தா, நிஷா ஆகிய மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.அப்போது சம்யுக்தா, யார் முதலில் கால் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துவிடீர்களா என்று கேட்கிறார். அதற்கு நான் முதலில் செல்கிறேன் என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை சொன்ன அர்ச்சனா, பாலாவிற்காகஆரி, கண்டிப்பாக வருவார். அப்படி நடந்தால் பாலாஜி கண்டிப்பாக தோற்றுவிடுவான். அதனால் பாலாவிடம் நான் பேசுகிறேன். நான் நாமினேட் ஆனாலும் பரவாயில்லை பாலாஜி வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதே போல தற்போது வெளியாகி இருக்கும் Unseen வீடியோவில் அர்ச்சனா மற்றும் சம்யுக்தா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சம்யுக்தா, அனிதா சம்பத் எல்லாம் எதுக்கு எடுத்தாலும் புலம்புது. அதே போல அர்ச்சனா, நான் அழுவது இவங்களுக்காகோவோ இல்லை அவங்க சொல்வதை யோசித்தோ இல்லை. இதுங்கெல்லாம் சொல்கிற அளவிற்கு நம்ம நிலைமை ஆகிவிட்டதே என்று சொன்னதுக்கு. இதுங்க எல்லாம் பேச தகுதியே இல்லை. இந்த மூணு பேரும் வேலு அண்ணா போறதுக்கு முன்னாடியே இந்த மூனு பீசும் போய் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட்ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக ‘Nomination Topple Card’ என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர். இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த ‘Nomination Topple Card’ கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். அந்த காண்டில் தான் சம்யுக்தா இப்படி புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

Advertisement