வாய்த் தொறந்தாலே கலீஜ் – அசிங்கப்படுத்திய சம்யுக்தா. லீக்கான வீடியோ.

0
27974
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.பிக் பாஸில் இவரை பற்றி இவர் சொன்னது. நான் படிச்சது இன்ஜினியரிங். கார்ப்பரேட்டில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மாடலிங் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருக்கும். அது போல தான் மிஸ் சென்னை டைட்டில் ஜெயித்தேன்.

-விளம்பரம்-

அதனால் மாடலிங், நடனம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. என் மகனுக்கு 4 வயது ஆகிறது. அவன் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன்.மேலும் இரண்டு பிஸ்னஸ் நடத்தி வருகிறேன். சோசியல் மீடியா influencer ஆக இருக்கிறேன். நான் ஒரு ஃபிட் மாம்.என்னை போன்று இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன். பிக் பாஸ் வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறி இருந்தார். இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார்ப்பரேட்டில் பணியாற்றி இவர் மாடல் அழகியும் ஆவார்.

- Advertisement -

மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சம்யுக்தா கொஞ்சம் நடுநிலையாக தான் இருந்த வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜி டீமில் இணைந்து விட்டார். அதிலும் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி ‘தருதல’ பஞ்சாயத்தில் பாலாஜிக்கு ஆதரவாகத்தான் சம்யுக்தா பேசியிருந்தார். பாலாஜிக்கு யாரெல்லாம் பிடிக்காது அவரை சமைப்பதற்கும் பிடிக்காது என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகிறார் சனம் ஷெட்டி மட்டும் பாலாஜி பிரச்சினை ஏற்பட்ட பின்னர் சம்யுக்தா சனம் ஷெட்டியிடம் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டையை போட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சனம் ஷெட்டிக்கும் சம்யுக்தாவிற்கும் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல கடந்த சில வாரமாக சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்து வருகிறார் சம்யுக்தா. இப்படி ஒரு நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்து பேசுகிறார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement