ஓவியா ஹேர் ஸ்டைலில் சம்யுக்தா – அதுவும் யார் கூட இருக்கார்னு பாருங்க.

0
108777
sam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 60வது நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார். இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.

-விளம்பரம்-

இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார். ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து கமலிடம் சொன்ன சம்யுக்தா, நான் வெளியேறுவது மிகவும் கலவையான உணர்வு, நான் இப்படி Nomination Topple Card மூலம் நாமினேஷனில் இடம் பெற்று வெளியேறுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் சம்யுக்தா.பிக் பாஸில் இவரை பற்றி இவர் சொன்னது. நான் படிச்சது இன்ஜினியரிங். கார்ப்பரேட்டில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மாடலிங் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருக்கும். அது போல தான் மிஸ் சென்னை டைட்டில் ஜெயித்தேன்.

அதனால் மாடலிங், நடனம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. என் மகனுக்கு 4 வயது ஆகிறது. அவன் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன்.மேலும் இரண்டு பிஸ்னஸ் நடத்தி வருகிறேன். சோசியல் மீடியா influencer ஆக இருக்கிறேன். நான் ஒரு ஃபிட் மாம் .என்னை போன்று இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன். பிக் பாஸ் வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறி இருந்தார். ஆனால், பிக் பாஸில் தனது கணவர் குறித்து அவ்வளவாக கூறியது இல்லை. இப்படி ஒரு நிலையில் சம்யுக்தா தனது கணவரோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஓவியா போல பாப் கட்டில் இருக்கிறார் சம்யுக்தா.

-விளம்பரம்-
Advertisement