விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். நடிகை சனம் ஷெட்டி நடிகை என்பதை விட மக்கள் மனதில் பிரபலமானது தர்ஷனின் காதல் விவகாரத்தில் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷன் இன் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டார்.

ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், அவருக்கு இன்னமும் அவரது பழைய காதலனுடன் தொடர்பு இருக்கிறது என்றும் கூறி இருந்தார். மேலும், சத்யா மற்றும் ரம்யா(பிக் பாஸ் ரம்யா) திருமண நிகழ்ச்சிக்கு அவள் சென்ற போது அங்கே அவளுடைய முன்னாள் காதலன் வந்திருக்கிறான். அவருடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் ஒன்றாக இருந்திருக்கிறார் என்று கூறி இருந்தார். தர்ஷன் சொன்ன சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் வேறு யாரும் இல்லை அவரும் ஒரு நடிகர் தான்.
இதையும் பாருங்க : பிரபல சின்னத்திரை ஜோடிகள் ராகவ் ப்ரீத்தாவ ஞாபகம் இருக்கா ? அவர்களின் தோலுக்கு மேல் வளர்ந்த மகள்.
அவருடைய பெயர் அஜய், இவர் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'கலைவேந்தன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சனம் ஷெட்டி தான் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தான் சனம் ஷெட்டி தர்ஷனை காதலித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/bfriendchat/status/1361312384019693570
ஆனால், தர்ஷன் காதலும் முதல் காதலை போலவே கைகூடாமல் போனது. மேலும், தர்ஷன் மீது சனம் ஷெட்டி வழக்கும் தொடர்ந்து உள்ளார், அதன் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை சனம் ஷெட்டி கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ஆண் ஒருவருடன் கொண்டாடியுள்ளார். அந்த பதிவில் என் உலகத்தை பிரகாசமாக்கி விட்டாய் மோனி. காதலர் தின டின்னருக்கி நன்றி 'என்று குறிப்பிட்டிருந்தார். சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்து இவர் தான் உங்கள் புதிய காதலரா என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். அனிதா சம்பத்தும் இதற்கு வாழ்த்து தெரிவித்துளளார்.
https://twitter.com/Vidhyalakshmi_/status/1361343392316203013
சனம் ஷெட்டி குறிப்பிட்டுள்ள அந்த 'மோனி' யார் என்று பலரும் ஆவலாக தேடி வருகின்றனர். ஆனால், சனம் ஷெட்டி பிக் பாஸில் இருந்த போதே அவரை பற்றி பேசியுள்ளார். மேலும், மோனி தன்னுடைய கடினமான காலங்களில் தன்னுடன் இருந்ததாகவும், அவர் என்னுடைய நல்ல நண்பர் தான் ஆனால், அவர் அதை விட முக்கியமானவர் என்று கூறி இருந்தார். அதே போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய போது கூட மோனி, வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பிய போது ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ என்று அப்போதே தனது காதலை சொல்லியுள்ளார் சனம்.





