நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க : நீ ஆசைப்பட்டத நான் நிறைவேத்துவேன் மாமா – வடிவேலு பாலாஜியின் பிறந்தநாளில் புகழின் உருக்கமான பதிவு.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை என்று பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்களுக்கு முன்பாக மாட்டு சாணத்தை உடலில் பூசுதல், கோமியத்தை குடித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு, அவ்வாறு செய்தால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என சிலர் கூறுவது போன்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், இது தவறான நடவடிக்கை என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். மேலும், இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், விலங்குகளிடம் இருந்து நோய்கள் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதி எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும்.

Advertisement

அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் என்று கூறி இருந்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள சனம் ஷெட்டி, ஆய்வக ஆராய்ச்சிக்காக நாங்கள் ஏன் காத்திருந்தோம் என்று தெரியவில்லை, கோ மாதாக்கு ஜெய் என்று பதிவிட்டுள்ளார். ,

Advertisement
Advertisement