ஏற்கனவே வெளியேறிய நபரை வைல்டு கார்டாக களமிறக்கும் பிக் பாஸ்.

0
10954
BiggBoss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61நாட்களை கடந்து விட்டது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தி சுசித்ரா சம்யுக்தா, சனம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரையும் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 4 சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் சிவாணிக்கு ஜோடியாக நடித்த அஸீம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்று பல வாரமாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவர் நுழைந்த பாடில்லை. இப்படி ஒரு நிலையில் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக சனம் ஷெட்டியை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உளள்து.

sanam

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 4 சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் சிவாணிக்கு ஜோடியாக நடித்த அஸீம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்று பல வாரமாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவர் நுழைந்த பாடில்லை. இப்படி ஒரு நிலையில் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக சனம் ஷெட்டியை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

Advertisement