வெப் சீரிஸ்ஸில் சார்பட்டா நடிகருடன் லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சியில் சனம் – வைரலாகும் வீடியோ.

0
11017
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். அதே போல மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை. அதே போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, தான் இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன் ஆனால், எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார் சனம்.

இந்த நிலையில் இவர் ‘குருதி களம்’ என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து இயக்கிய இந்த வெப் தொடரில் சார்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் மாரிமுத்து, வின்செண்ட் அசோகன், ஶ்ரீகாந்த், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த வெப் தொடரில் நடிகை சனம் ஷெட்டி, சந்தோஷ் பிரதாப்புடன் லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பறவி வருகிறது. ஏற்கனவே நடிகை சனம் ஷெட்டி, எதிர்வினையாற்று என்ற படத்திலும் லிப் லாக் காட்சிகளில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement