விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சாண்டி. தனது நடனம் மற்றும் நகைச்சுவையான குணம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி. இந்த சீசன் துவங்கிய சிறிது நாட்களிலேயே ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளரின் அன்புக்கு உரியவரானார் சாண்டி.
https://www.instagram.com/p/CAgDRmanQ-k/?igshid=1nm3ra5nszxki
இந்த சீசனில் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக தேர்வான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை கொண்டவராக இருந்தார் சாண்டி. இவரது கானா பாடல்களை கமல் அவர்களை பாராட்டியும் இருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு போட்டியாளரும் செல்லும் முன்னரும் இவர் பாடும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டது.
மாஸ்டர் சாண்டி, நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

மேலும், சாண்டிக்கு தனது மகள் லாலா என்றால் மிகவும் உயிர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சாண்டி மகள் வந்த எபிசொட் அனைவரையும் நெகிழ வைத்தது. இந்த நிலையில் சாண்டி மகள் லாலா தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சாண்டி, தனது மகள் பிறந்த போது அவரை கையில் ஏந்திய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.





