பத்ரி பட பாணியில் வனிதா மற்றும் சேரனுக்கு டப்பிங் கொடுத்த சாண்டி.! வைரலாகும் வீடியோ.!

0
4584
sandy
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாலும் சரி, பார்வையாளர்களாகும் சரி அதிகம் விரும்பப்படுவது சாண்டி தான். பிக் பாஸ் வீட்டிற்குள் சாண்டி மட்டும் தான் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டு வருகிறார். சாண்டி மட்டும் இல்லை என்றால் போட்டியாளர்கள் அனைவரும் மண்டையை பிச்சுக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

சாண்டி மற்ற போட்டியாளர்கள் போல நடித்து காண்பிப்பதில் மிகவும் வல்லவர் என்று தெரியும். மோகன் வைத்யா வெளியே சென்றபோது கூட அவரைப் போன்று உடையணிந்து மற்ற போட்டியாளர்களை அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார் சாண்டி. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா சேரன், மதுமிதா ஆகியோர் சமையல் அறையில் பேசிக் கொண்டிருக்கும் போது அதனை வெளியில் இருந்து இமிடேட் செய்து கொண்டிருந்தார் சாண்டி.

இதையும் பாருங்க : முகெனை அடுத்து தர்ஷனை டார்கெட் செய்யும் வனிதா.! இவரையும் விட்டு வைக்கலயா.!

- Advertisement -

கடந்த சில நாட்களாக மிகவும் சலிப்பாக போய்க்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சிறப்பு விருந்தினராக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் வந்த முதல் நாளில் இருந்தே மற்ற போட்டியாளர்களை சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதுமிதா, தர்ஷன் மற்றும் கவின் இடையே ஒரு சண்டை வெடித்தது.

அதன் பின்னர் இந்த சண்டை பற்றி மதுமிதா கிச்சனில் இருந்த வனிதாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தால். அதனை தூரத்தில் இருந்து சாண்டி, தர்ஷன் லாஸ்லியா, கவின் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் . அப்போது சாண்டி பத்ரி படத்தில் வரும் ஒரு காட்சியில் விவேக் டப்பிங் கொடுப்பது போல வனிதா மற்றும் சேரனுக்கு டப்பிக் கொடுத்து போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்க வைத்தார். இது ஒரு புறம் நகைப்பாக இருந்தாலும் மறுபுறம் கொஞ்சம் முகம் சுளிக்கும் வகையில் தான் இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement