அனல் பறக்கும் முதல் நாள் ஓட்டிங்.! முதல் இடத்தில் சாண்டியா ? தர்ஷனா?

By Rajkumar · 20/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவு கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் பாருங்க : வனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.! ஷாக்கில் உறைந்த போட்டியாளர்கள்.! 

இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க நேற்று இரவு முதல் தொடங்கிய ஒட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதில் தர்ஷன் மற்றும் சாண்டி இருவருக்கும் தான் போட்டி நிலவி வருகிறது. அதில் ஆரம்பம் முதலே சாண்டி தான் முன்னிலை வகித்து வருகிறார். அதே போல கஸ்தூரிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full