வனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.! ஷாக்கில் உறைந்த போட்டியாளர்கள்.!

0
17547
vanitha

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

அதே போல வனிதா சென்ற நாளில் இருந்தே வனிதா தான் பிக் பாஸ் வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்து வருவது போல இருந்து வருகிறார். அதிலும் இவர் தான் தற்போது பிக் பாசிர்கே ஆர்டர் போட்டு வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது நான் அப்புறம் குறும் படம் போட்டு காண்பிக்க சொல்வேன் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : நடந்து முடிந்தது இந்த வார நாமினேஷன் பிராசஸ்.! யார் யாரை நாமினேட் செய்தார்கள்.!

- Advertisement -

அவ்வளவு ஏன் அபிராமி சிறையில் இருந்த போது சாண்டி சிறையை திறக்க சென்றார். ஆனால், அதற்கு சேரன் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர் வனிதா நான் திறக்கிறேன் என்று வம்பாக சிறையை திறந்த அடுத்த நொடியே அபிராமியின் ஜெயில் தண்டனை முடிந்தது என்று அறிவித்தார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

கடந்த சனிக்கிழமை கமல் பேசியபோது கூட கமல், வனிதா போட்டியாளரா சிறப்பு விருந்தினரா என்பதை உறுதி படுத்தவில்லை. இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் நடைபெற்றது. அப்போது வனிதா தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். அதனால் அவரை நாமினேட் செய்ய முடியாது என்று கூறி இருந்தார்.

வனிதா வைல்ட் கார்டு என்ட்ரி என்றவுடன் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கொஞ்சம் ஷாக்கடைந்துள்ளனர். எனவே, வனிதா மீண்டும் போட்டியாளராக தொடர உள்ளார் என்பது உறுதியானது. இருப்பினும் மக்கள் வெளியேற்றிய ஒரு நபரை பிக் பாஸ் ஸ்வாரசியத்திற்காக மீண்டும் கொண்டு வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்திவில்லது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement