டேய் வெளியே போடா.! கவினை திட்டி நாமினேட் செய்த சாண்டி.!

0
8370
sandy

பிக்பாஸ் நிகழ்ச்சி 68 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், கடந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.

இதனால் கடந்த சில வாரங்களாகவே சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டுதான் இருக்கிறது இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இருக்கும் சுவாரஸ்யம் இந்த வாரம் இல்லை இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களுக்கு ஒரு சில கேள்விகளையும், டாஸ்க்குகளையும் கொடுத்திருந்தார்.

இதையும் பாருங்க : என்னை வெளிய போனு சொன்னா இல்ல அதன் அவள நாமினேட் பன்றேன்.! ஓபன் நிமினேஷனில் கடுப்பாகும் கவின்.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கவின் சேரன் மற்றும் ஷெரின் பெயரை நாமினேட் செய்கிறார். அதற்கு ஏன் என்று வனிதா கேட்க, என்னை அவ நாமினேட் செய்தால் இல்ல, என்னை வெளிய போனு சொன்னா இல்ல அதன் காரணம் என்று கூறுகிறார்.

மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது என்ன பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம்.

-விளம்பரம்-

Advertisement