RRR மேடையில் தெறிக்கவிட்ட சாண்டி – எழுந்து நின்று கைதட்டிய ஒட்டுமொத்த அரங்கம். இதோ வீடியோ.

0
1097
sandy
- Advertisement -

RRR படத்தின் பட விழாவில் தன் நடனத்தால் ஒட்டு மொத்த அரங்கத்தையும் தெறிக்கவிட்டுள்ளார் சாண்டி. பாகுபலி பிரம்மாண்டத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் தற்போது ராஜமௌலி இயக்கிய RRR படம் மிகப்பெரிய வெற்றியை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், இந்த படத்தில் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. அதோடு சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

- Advertisement -

பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் RRR :

மேலும், பல தடைகளுக்கு பிறகு இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் RRR படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்கள். RRR படத்தின் பிரமோஷன் விழா சிறப்பாக நடைபெற்றது.

RRR மேடையில் தெறிக்கவிட்ட சாண்டி :

இந்நிலையில் இந்த பட புரமோஷன் விழாவில் மாஸ்டர் சாண்டிக்கு படக்குழுவினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ள வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் விழாவில் சாண்டி மாஸ்டர் அவர்கள் தெறிக்கவிடும் நடனத்தை ஆடி இருந்தார். அதில் அவர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இதற்கு முன் நடித்த படங்களின் தொகுப்புகளை சேர்த்து நகைச்சுவையாகவும் நடனம் ஆடி இருந்தார்.

-விளம்பரம்-

எழுந்து நின்று பாராட்டிய RRR குழு :

இதை பார்த்த RRR படத்தின் ஒட்டு மொத்த குழுவும் எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார்கள். பின் அனைவரும் சாண்டியை பாராட்டியிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார்.

நடிகராகவும் அசத்தும் சாண்டி :

அதுமட்டுமில்லாமல் 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய செயல்கள் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் நடன இயக்குனராக கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிகராக இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement