உங்கள விட கவின் வளர்ந்துடுவார்னு பொறாமையா – சாண்டி மீது பாயும் கவின் ரசிகர்கள்.

0
6287
sandy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் நடிகர் கவின். கவின் கடந்து அவ்வளவு எளிதான விசயம் அல்ல, படிக்கும்போதே ஆர்ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார்.சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் முருகன் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் இவருடைய நடிப்பினால் அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

- Advertisement -

அதன் பின்னர் நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த கவின் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்தான் கவினுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை அவர் மிகவும் நெருக்கமாக இருந்தது சாண்டியுடன் மட்டும்தான் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கூட கவின் மற்றும் சாண்டி இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தர்ஷன் பிறந்தநாளை முன்னிட்டு சாண்டி, தர்ஷனின் காமன் dp ஒன்றை வெளியிட்டார். இது தான் தற்போது கவின் ரசிகர்கள் சாண்டியை திட்டித் தீர்க்கும் காரணமாக அமைந்துள்ளது. அது என்னவெனில் கவின் பிறந்தநாளின் போது சாண்டி கவினின் காமன் Dpயை பதிவிடவில்லையாம். ஆனால், தர்ஷன் dpயை மட்டும் பதிவிட்டதால் கவின் ரசிகர்கள் சாண்டி மீது அதிருப்பிதியில் ஆழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-

கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவருக்கும் உறுதுணையாக இருந்தது சாண்டி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இருவரும் ஒருவருக்கொருவர் பரிட்சம் தான் என்றாலும் பிக் பாஸ் வீட்டில் தான் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. கவின் பல முறை சாண்டியை விட்டு கொடுத்தாலும் சாண்டி என்றுமே கவினை விட்டு கொடுத்தது இல்லை.

Advertisement