தலைவர் பதிவிய ஏன் விட்டு கொடுத்தார் சாண்டி.! கிண்டலடித்தவருக்கு காஜலின் பதில்.!

By Rajkumar · 3/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜட்டிற்ரான காண டாஸ்க் கொடுக்கப்படும். ஹவுஸ் மேட்ஸ்களின் சமையல் பொருட்களுக்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டாலும், இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படுபவர்கள் தலைவர் பதிவிற்கு போட்டியிடலாம். அந்த வகையில் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜட் டாஸ்க் நடத்தப்பட்டது.

https://twitter.com/MadhanM62277507/status/1157343831550902272

தலைவர் பதவிக்கு போட்டியிடவே பலரும் டாஸ்க்குகளை மும்மரமாக செய்வதும் உண்டு. அந்த வகையில் நேற்றய எபிசோடில் இந்த வாரம் டாஸ்க்குகளை சிறப்பாக செய்த சாண்டி, முகென் மற்றும் மதுமிதா அடுத்த வார தலைவருக்கான டாஸ்கில் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : 1999-ல் அவர் எனக்கு என்ன செய்தார் தெரியுமா.! சேரன் குறித்து ரகசியத்தை உடைத்த சரவணன்.! 

அடுத்த வார தலைவர் யார் என்பதர்க்கான போட்டியில் மூவருக்கும் பணி சறுக்கு செய்யும் போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் மூவரும் ஒரே பலகையில் ஒருவரை ஒருவர் தொடாமல் நகர வேண்டும் இறுதி வரை யார் நிற்கிறார்களோ அவர்கள் அடுத்த வார தலைவராக தேர்ந்துடுக்க என்று கூறப்பட்டது.

https://twitter.com/kaajalActress/status/1157339802196275200

இந்த டாஸ்கின் போது மதுமிதா அடிக்கடி விழுந்து கொணடே இருந்ததால், நான் முன்னாடி நிற்பதால் அவருக்கு அடிபட்டு கொண்டே இருக்கிறது, இதனால் நான் போட்டியில் இருந்து விலகுவதாக சாண்டி விலகினார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், சாண்டி ஏன் தலைவர் பதிவை செய்ய மறுக்கிறார், ஒருவேளை பயமா என்று கிண்டலடித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சாண்டியின் முன்னாள் மனைவியும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான காஜல் பசுபதி, சாண்டி, இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கான டாஸ்க்ல இருந்து நண்பர்களுக்காக விட்டு கொடுத்துட்ட, சூப்பர் செல்லம் என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full