பிக் பாஸ் 2 அடுத்தக்கட்ட அதிகாரப்பூர்வ வெளியீடு..! புகைப்படம் உள்ளே

0
1704
bigg-boss
- Advertisement -

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!! இது பிக் பாஸ் 1, நல்லவர் யார் கேட்டவர் யார்! இது பிக் பாஸ் 2 என்ற மாசான வசனத்துடன் வெளியானது, தமிழில் விரைவில் துவங்கவுள்ள பாஸ் 2 நிகழ்ச்சியின் விளம்பர வீடியோ.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. கிட்டத்தட்ட தெலுங்கில் வெளியாகியுள்ள பிக் பாஸ் 2 வின் விளம்பரம் போலவே தான் இந்த வீடியோ டீசரும் இருந்தது.

-விளம்பரம்-

தமிழில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது டீசர் தயாராகி வருகிறதாம். இந்த டீசரின் டப்பிங் வேலைகளில் நடிகர் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

English Overview:
We can see some changes in Bigg Boss season 2 Tamil. For an example the tag line is changed and we can see it in the promo. To know more about Bigg boss just visit the link “Bigg Boss vote Tamil“.

Advertisement