தமிழ் சினிமாவில் நாகேஷ் துவங்கி தற்போது இருக்கும் சூரி வரை பல்வேறு காமெடி நடிகர்கள் ஹீரோவாகவும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா துறை உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவர்.’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார்.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’, ‘ரகளபுரம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த கருணாஸ். இறுதியாக 2013 ஆம் ஆண்டு ரகளபுரம் படத்தில் ஹீரோவாக நடித்த கருணாஸ், அதற்கு பின் ஹீரோவாக நடிக்கவில்லை அதே போல தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 5 வருடங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

Advertisement

இருப்பினும் ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். இறுதியாக சூரரை போற்று, சங்கத்தலைவன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் கருணாஸ். இந்தப் படத்தை கருணாஸ் ஹீரோவாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் தான் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  அழகம்மை மகன் சசிகுமார் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஆதார்’ என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்று உள்ளது.

Advertisement
Advertisement