பாலாஜி மனைவியை கேவலமாக பேசிய மும்தாஜ்.! அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

0
9613
actress-mumtaj

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாலாஜியின் மனைவி நித்யாவை நடிகை மும்தாஜ் அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

mumtaj

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டிற்குகான தலைவர் போட்டி நடைபெற்றது. இதில் நடிகை மும்தாஜ், நடிகை ஜனனி ஐயர், நடிகர் மஹத் ஆகியோர் பங்குபெற்றனர். ஆனால், இறுதியில் பெரும்பான்மையான போட்டியாளர்களின் ஆதரவு என்னவோ ஜனனிக்கு தான் கிடைத்தது. பின்னர் நடிகை ஜனனி பிக் பாஸ் வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு பின்னர் இந்த வாரத்திற்கான ஏவிக்ஷன் நடந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபர்களை தேர்வு செய்த்து அவர்களை ஏன் எலிமினேட் செய்ய வேண்டும் என்ற காரணத்தை கூற வேண்டும். இதில் நடிகைமும்தாஜ், ரித்விகா மற்றும் நித்யாவின் பெயரை கூறினார். அப்போது நித்யாவை ஏன் வெளியேற்ற வேண்டும் என்ற காரணத்தை கூறும் போது ‘ அவர் சற்று சுத்தம் இல்லாதவராக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார். இது அவரை அசிங்கப்படுத்தியது போலவே இருந்தது.

-விளம்பரம்-

mumtaj-actress

மற்ற போட்டியாளர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூறி போட்டியாளர்களை ஏவிக்ஷன் செய்யவில்லை. ஆனால், நடிகை மும்தாஜ் மட்டுமே நித்யாவின் தனிப்பட்ட பழக்கத்தை குற்றம் சாட்டி கூறியுள்ளர். நடிகை மும்தாஜ் செய்யும் ஒரு சில செயல்கள் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை நமீதாவை தான் நமக்கு நினைவுபடுத்துகிறது என்பதே எங்களுடைய எண்ணம்.மேலும், நடிகை மும்தாஜ் ஏற்கனவே சக போட்டியளரான நடிகர் சென்ராயன் மீதும் ஒரு சிறு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement