ஒரே நாள் – நாளை கோலாகளமாக துவங்க இருக்கிறது பிக் பாஸ் சீசன் 4.

0
516
biggboss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது . கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது.

- Advertisement -

தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு கோலாகளமாக துவங்க இருக்கிறது. அதற்கான ஷூட்டிங் இன்று இவிபி-யில் நடைபெற இருக்கிறது.

கொரோனா பிரச்சனை காரணமாக பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் இன்று ஹோட்டல்களில் இருந்து கிளம்ப இருக்கின்றனர். பெரும்பாலும் இன்றே நம்பகரமான போட்டியாளர்களின் விவரம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement