பிக் பாஸ் 5 தொகுப்பாளர் யார் தெரியாமா ? மார்ச் மாதமே அட்வான்ஸ் எல்லாம் வாங்கி செலவும் பண்ணிட்டாராம்.

By ·

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : அட, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை குட்டி கண்ணனுக்கு இவ்ளோ அழகான தங்கை இருக்காரா.

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த மார்ச் மாதமே பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னார். அந்தத் தொகையை தேர்தலுக்கு முந்தைய கட்சி செலவுகளுக்குக் கொடுத்தாகவும் அவர் கூறினார். எனவே, பிக் பாஸ் 5 எப்போது துவங்கும் என்று தெரியவில்லை என்றாலும் இந்த சீசனுக்கு கமல் தான் அம்பையர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full