இன்று துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 – வெளியான 16 போட்டியாளர்களின் பட்டியில்.

0
1070
biggboss
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் இந்த நிகழ்ச்சிநான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசன் தொடங்க உள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பிக் பாஸ் சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் அதிகமாகியுள்ளது. கடந்த நான்கு சீசன்களிலும் 14, 15 போட்டியாளர்கள் தான் முதலில் அறிமுகம் செய்வார்கள். பிறகு சீசன் இறுதியில் 18 போட்டியாளர்கள் வந்துவிடுவார்கள். ஆனால், இந்த சீசனில் ஆரம்பத்திலேயே 18 போட்டியாளர்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீதி இருவர் அல்லது மூவர் வைல்ட் கார்ட்டில் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் 12 நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. கானா இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, அப்சாரா ரெட்டி, நமிதா மாரிமுத்து, நதியா சங், அபிநய் வட்டி, நடிகர் வருண், பாடகி சின்ன பொண்ணு, ப்ரித்தி சஞ்சீவ், ப்ரியங்கா, நிழல்கள் ரவி, பவானி ரெட்டி, கோபிநாத் ரவி மற்றும் நிரூப் நந்தகுமார். மீதி போட்டியாளர்கள் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-விளம்பரம்-
Advertisement