சர்ச்சை சீரியல் நடிகை, சமீபத்தில் சீரியலை விட்டு விலகிய சீரியல் நடிகை – இதோ பிக் பாஸ் 6 பெண் போட்டியாளர்கள் Leaked List

0
298
biggboss6
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.
அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இதில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் இடத்தை நிரூப்பும் பெற்று இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 6 பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. பிக் பாஸின் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற ஆர்வம் ஆரம்பித்துவிட்டது. மேலும், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா? அல்லது சிம்புவே தொடர்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ப்ரோமோ:

அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகி இருந்தது . இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் சில பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்:

அதாவது, விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான திவ்யதர்ஷினி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இவரை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான ரோஷினி, ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா, சோசியல் மீடியா சர்ச்சை நாகியாக இருக்கும் ஸ்ரீநிதி, வழக்கு எண் 18 / 9 படம் மூலம் பிரபலமான மனிஷா யாதவ், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நடிகை ஷில்பா மஞ்சுநாதன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, விஜே அஞ்சனா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement