பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா.! ரகசிய அறைக்குள் வைக்கப்படுவாரா?

By Rajkumar · 27/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீரா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். மேலும், கடந்த 5 நாட்களாக இந்த வாரத்திற்கான ஓட்டிங் மும்மரமாக நடைபெற்றது.

இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே வனிதாவிற்கு பிறகு சாக்க்ஷி தான் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்டார். அதற்கு ஏற்றார் போல சாக்க்ஷியும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றார். எனவே, இந்த வாரம் சாக்க்ஷியை வெளியேற்ற ரசிகர்கள் மும்மரமாக வாக்களித்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா.! லீக்கான புகைப்படம் இதோ.! 

இந்த நிலையில் சற்று நேரத்திற்க்கு முன்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு மீரா வெளியேறிய புகைப்படம் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கமல் முதன் முறையாக சீக்ரேட் ரூமை காண்பித்தார். எனவே, மீரா சீக்ரேட் ரூமில் வைக்கப்படுவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமே மீரா தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் கண்டன்ட்களை கொடுத்து வருகிறார். ஒருவேளை இவர் சென்றுவிட்டால் நிகழ்ச்சியில் ஸ்வாரசியமே இருக்காது என்பதால் அவரை சீக்ரேட் ரூமில் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full