ஐஸ்வர்யா-சென்ராயன் சண்டையை “டப்ஸ்மேஷ்” செய்த சிம்பு பட நடிகர்.!

0
218
aishwarya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்திய எந்த அளவிற்கு பிரபலம் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பங்கு பெரும் போட்டியாளர்களின் வசனங்களும் மக்கள் மத்தியில் படு பேமஸ். இந்நிலையில் சமீபத்தில் சென்ராயன் பேசியதை நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் அற்புதமாக டப்ஸ்மேஷ் செய்துள்ளார்.

Aishwarya-dutta

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பேசிய பல வசனங்கள் படு ட்ரெண்டிங் ஆனது. தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களுக்கு மேலான நிலையில், தற்போது சென்றாயன் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் சண்டையிட்ட வசனம் ஒன்று படு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ‘ராணி’ டாஸ்கின் போது சென்ராயன் குடித்துக் கொண்டிருந்த காபியை வாங்கி கீழே ஊற்றினார். இதனால் ஐஸ்வரிவிற்கும், சென்ராயனிற்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். தற்போது இந்த காட்சியை நடிகர் சதீஷ் டப் ஸ்மாஷ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியா, ரைசா,ஸ்னேகன் போன்றவர் பேசிய வசனங்களின் டப்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ராயனின் டப் ஸ்மாஸும் நடிகர் சதீஷால் ட்ரெண்ட்டாகி வருகிறது.