இந்த வாரம் வெளியேற போவது இவர் தான்.! முதல் நாள் ஓட்டிங்லயே தெரிஞ்சிடிச்சே.! எப்படினு கேட்கிறீங்களா.!

0
41556
Housemate
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களாக இருந்து வந்த சாக்க்ஷி ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், அப்படி எதுவும் நடைபெறாமல் சாக்க்ஷி நேரடியாக வீட்டிக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த வாரம் ரகசிய அறை பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : நோண்டி நோண்டி விடாதீங்க.! வனிதாவிடம் சண்டை போட்ட சாண்டி.! 

- Advertisement -

மேலும், நேற்றய நிகழ்ச்சியில் சிறப்பு போட்டியாளராக வனிதா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் தலைவர் சாண்டயை நாமினேட் செய்ய முடியாது அதே போல புதிய போட்டியாளரான கஸ்தூரியையும் நாமினேட் செய்ய முடியாது என்று பிக் பாஸ் அறிவித்தார்.

-விளம்பரம்-

இறுதியாக நேற்றய நாமினேஷன் முடிவில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.

தற்போது வந்துள்ள ஒட்டு என்னிக்கை படி அபிராமி தான் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு முக்கிய காரணமே, லாஸ்லியாவிற்கு லாஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். கவினுக்கு கவின் ரசிகர்கள் மற்றும் சாண்டி ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர். முகெனுக்கு முகென் மற்றும் தர்ஷன் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

இறுதியாக மதுமிதாவுக்கு கூட தற்போது ஷெரின் ரசிகர்கள் வாக்களித்து விடுவார்கள். எனவே, இந்த வாரம் அபிராமி தான் வெளியேற்றப்படுவார் என்று ஊர்ஜிதமாக கணிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல அபிராமிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement