வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பிக் பாஸ் 2 நடிகருக்கு டான் படத்தில் வாய்ப்பை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன்.

0
1781
shivangi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார்.என்னதான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தாலும் விஜய் டிவியை இன்றளவும் மறவாமல் தான் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

அடிக்கடி விஜய் டிவிக்கும் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டு தான் இருக்கிறார் சிவகார்த்திகேயன். கடந்த சில வாரத்திற்கு முன்னர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.சிவகார்த்திகேயன் பாலாவை பாராட்டியதோடு ஷிவாங்கி போலவே மிமிக்கிரி செய்து அசத்தி இருந்தார். மேலும், இது போல ஒரு தங்கச்சி இல்லையே என்று பீல் செய்தார் சிவகார்த்திகேயன். மேலும், இதில் உள்ளவர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறி இருந்தார் சிவகார்த்திகேயன்.

இதையும் பாருங்க : மன்னிப்பு கேட்க முடியாது – இது தான் உண்மையான வீடியோ. ஆதாரத்தை பகிர்ந்த ராஜலட்சுமி.

- Advertisement -

அதற்கு ஏற்றார் போல தற்போது ஷிவாங்கிக்கு, தான் நடிக்கும் டான் படத்தில் வாய்ப்பை கொடுத்துள்ளார் சிவகார்த்திகயேன். நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் மற்றும் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ‘டான்’ என்கிற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறா.ர் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறார். சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, முனீஸ்காந்த் போன்ற பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தில்குக்கு வித் கோமாளி ஷிவாங்கியும் ,ஆர்ஜே விஜயும் கமிட்டாகி இருந்தார்கள் இப்படி ஒரு நிலையில் பிரபல நட்சத்திர தம்பதிகளான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸின் மகன் ஷாரிக்க்கும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக் பாஸுக்கு பின் நடிகர் ஷாரிக் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கும் தன்னுடைய படத்தில் வாய்ப்பை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

-விளம்பரம்-
Advertisement