ஷாக்கிங் : காப்பாற்றபட்ட ஷெரின்.! யாரும் எதிர் பாராத விதமாக இந்த வாரம் வெளியேறிய நபர்.!

0
25747
bigg-boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கவின் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.

-விளம்பரம்-
tharshan

மேலும் இந்த வாரம் நடைபெற்ற இந்த ஒட்டிங்கில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கவின் வெளியேறி இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வலைதளங்களில் நடத்தப்பட்டுவரும் ஓட்டில் லாஸ்லியா தான் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

கவின் வெளியேறியதால் கவின் ரசிகர்களின் ஆதரவு அனைத்தும் தற்போது சாண்டி மற்றும் லாஸ்லியாவிற்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஓட்டிங்கை வைத்து பார்க்கும்போது சாண்டியை விட லாஸ்லியாவை ரசிகர்கள் காப்பாற்ற விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே , இந்த வாரம் கண்டிப்பாக லாஸ்லியா வெளியேற மாட்டார் என்பது மட்டும் உறுதி என்று நம்பப்பட்டது

அதே போல இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது பிக் பாஸில் யாரும் எதிர் பாராத விதமாக தர்ஷன் வெளியேற்ற பட்டுள்ளதாக நம்பாரமான தகவல் வெளியாகியுள்ளது. இது பலருக்கும் ஒரு ஷாக்காக அமைந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement