என்ன விஜய் ? அழகிய தமிழ் மகன் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் விஜய்யை ஷெரின் கேட்ட கேள்வி – செமயான வீடியோ சிக்கிடிச்சி.

0
1773
sherin
- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த அக்டோபர் 6 வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

வீடியோவில் 19 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் ஐட்டம் டான்ஸராக களம் இறங்கினார்.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் தலை காண்பித்து வந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் அதனை வேறு எந்த திரைப்படத்திலும் காணமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை ஷெரின் , விஜய் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஜய்யை சில கேள்விகள் கேட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் விஜயிடம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசும் ஷெரின்விஜயிடம் சில கேள்விகளை கேட்கும் போது விஜயின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து கேட்கிறார். அதற்கு நடிகர் விஜய் ஒரு நடிகனாக சினிமாவில் உடலை பிட்டாக வைத்துக் கொள்வது அவசியம் என்று கூறுகிறார். இந்த வீடியோவில் சின்ன பெண்ணாக இருக்கும் ஷெரின் விஜய் ஒரு மாபெரும் நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் விஜயிடம் மிகவும் சகஜமாக பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement