இன்ஸ்டாகிராமில் swimming போட்டோவை கேட்ட ரசிகர் -ஷெரின் பதிவிட்ட நச் வீடியோ.

0
1847
sherin
- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த அக்டோபர் 6 வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

-விளம்பரம்-

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் ஐட்டம் டான்ஸராக களம் இறங்கினார்.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் தலை காண்பித்து வந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் அதனை வேறு எந்த திரைப்படத்திலும் காணமுடியவில்லை அதேபோல நடிகரின் பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமனாக மாறி இருந்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது மீண்டும் உடல் எடை குறைந்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார் ஷெரின்.

பிக்பாஸ் வீட்டில் ஷெரீனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் இருந்து வந்தது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அடிக்கடி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவரிடம் ரசிகர் ஒருவர், ஸ்விம்மிங் புகைப்படம் ஒன்றை கேட்டிருந்தார். இதற்க்கு ஷெரின் என்ன வீடியோவை பதிவிட்டுள்ளார் என்று பாருங்க.

-விளம்பரம்-
Advertisement