தடுப்பூசி போட்ட போதே ஏற்பட்ட Side Effect பற்றி அன்று போட்ட பதிவு – தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள பிக் பாஸ் 3 பிரபலம்.

0
3140
sherin
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார். சமீபத்தில் காமெடி நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் கோமகன் ஆகியோர் கூட கொரோனாவால் காலமாகி இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : சினிமாவில் நடிக்க வரும் ஒரு வருசத்துக்கு முன்பு வரை இவ்ளோ குண்டாக இருந்துள்ள அஜித் பட நடிகை.

- Advertisement -

இப்படி சினிமா உலகை ஆட்டிப்படைத்தது வரும் கொரோனா தொற்று சின்னத்திரை பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் பிக் பாஸ் பிரபலங்களான கேப்ரில்லா, சென்றாயன், அஸ்வின் என்று பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 3 போட்டியாளரான ஷெரீனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதனால் தன்னுடன் பாண்டிசேரி ஏர்போர்ட்டில் புகைப்படம் எடுத்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். கடந்த மே மாதம் தான் ஷெரின் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார். அப்போது தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பதிவிட்ட ஷெரின் உடல்நிலை சரியில்லை, 102 அளவு காய்ச்சல் அடிக்கிறது. தாங்க முடியாத உடல்வலி, தலைவலி மிகவும் சோர்வாக இருக்கிறது. அப்படி என்றால் தடுப்பூசி வேலை செய்கிறது என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement