பிக் பாஸில் கலந்துகொண்டு இருக்கும் ஷெரினா யார் தெரியுமா ? இத பத்தி ஏன் அவர் சொல்லவே இல்ல.

0
1627
sherina
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல எதிர்பார்களுடன் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதோடு பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்நோக்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது.

போட்டியாளர்கள் :

அந்த வகையில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்த முறை பல புது முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஷெரினா பற்றிய தகவல் :

அதிலும் இளசுகளை கவரும் வகையில் பல இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஷேரினா என்ற மாடல் கலந்துகொண்டு இருக்கிறார். கேரளாவில் பிறந்த இவர் பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்து இருக்கிறார். மேலும், இவர் சாய்ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை பெங்களூரில் நடத்தி வருகிறார். மேலும், UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சமுத்திரகனி படத்தில் நடித்துள்ள ஷெரினா :

இவர் பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் வென்று இருக்கிறார். குறிப்பாக Grazia Ford Super Model Of India World என்ற பட்டத்தை வென்று இருக்கிறார். இவ்வளவு விஷயத்தை சொன்ன அவர் தான் ஒரு நடிகை என்பதையும் சமுத்திரகனி படத்தில் நடித்ததைதையும் மேடையில் சொல்லவே இல்லை. சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த ‘வினோதய சித்தம்’ படத்தில் தீபக்குக்கு மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதாதக்கது.

Advertisement