வலிகளோடு வெளியேறிய ஷெரினா, பிக் பாஸ் மூலம் சம்பாதித்த மொத்த பணம் எவ்ளோ தெரியுமா ?

0
358
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பலர் புது முகங்களாக இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அடுத்து என்ன வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.

பிக் பாஸ் எவிக்ஷன்:

இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ஷெரினா வெளியேறி இருக்கிறார். மேலும், ஷெரினா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சரிதான் என்று ரசிகர்களும் பதிவிட்டு இருக்கிறார்கள். காரணம், இவர் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பெரிதாக ஈடுபாடோடு விளையாடவில்லை என்று பலரும் கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஷெரினா பற்றிய தகவல்:

மேலும், செரினா கொச்சின் கேரளாவை சேர்ந்தவர். இவர் மாடல் மற்றும் நடிகையும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த வினோதய சித்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இவரால் பிக் பாஸ் வீட்டில் நீடித்து நிற்க முடியவில்லை. இவர் இந்த நிகழ்ச்சியில் 28 நாட்கள் இருந்தார்.

ஷெரினா வாங்கிய சம்பளம்:

ஆனால், ரசிகர்களை கவர்ந்தாரா? என்றால் கேள்வி குறிதான். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு செரினாவிற்கு 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் மொத்தம் 28 நாட்கள் இருந்த நிலையில் குறைந்தபட்சம் 23000 என்று கணக்கிட்டால் 644000 என்று கூறப்படுகிறது.

Advertisement