பல நாள் கழித்து ‘அரபிக் குத்து’ பாடலுக்கு ஆட்டம் போட்டு ஷிவானி வெளியிட்ட வீடியோ – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
409
shivani
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் அரபிக்குத்து பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் இந்த பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

வைரலாகும் விஜய்யின் அரபி குத்துபாடல்:

மேலும், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை சிவானி நாராயணன் அரபிக்குத்துப் பாட்டுக்கு ஆடிய டான்ஸ் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். சமீபகாலமாகவே இவர் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் பாடல்களுக்கும் டான்ஸ் ஆடி ரீல்ஸ் விடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜய்யின் அரபி குத்து பாடலுக்கு ஷிவானி நடனம் ஆடியிருக்கிறார்.

ஷிவானியின் அரபிக்குத்து பாடலை விமர்சிக்கும் ரசிகர்கள்:

இது இணையத்தில் வைரல் அடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிவானியை பயங்கரமாக கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் கன்பார்ம் பைத்தியம் பிடித்து விட்டது என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். மேலும், ரசிகர்களின் கமெண்டும், ஷிவானியின் வீடியோவும் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி. ஆனால், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். இந்த பிரபலத்தின் மூலம் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி:

ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஷிவானி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும்.

ஷிவானி நடிக்கும் படங்கள்:

இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. முதல் படத்திலேயே கமல் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் விக்ரம். இந்த படத்தில் ஒரு டான்ஸுக்கு ஷிவானி ஒப்பந்தமாகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் படத்திலும் சிவானி நடிக்கிறார். அதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படத்திலும் ஷிவானி நடித்துக் கொண்டிருக்கிறார். பின் இவர் நடிகர் வடிவேல் கம்பேக் கொடுக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.

Advertisement