பாலாஜிக்கு ஆறுதல் கூறும் ஷிவானி – லவ் ட்ராக்கை உசுப்பேத்தும் சுரேஷ், சம்யுக்தா.

0
2721
bala
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா, பாலாஜியை குழந்தை என்று குறிப்பிட்டபோது கடுப்பான பாலாஜி நீங்கள் என்னை குழந்தை என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் வாடா போடா என்று அழைக்க வேண்டாம் என்றும் அனைவர் முன்பும் பேசி இருந்தார் பாலாஜி. பாலாஜியின் இந்த பேச்சுக்கள் ரியோ மற்றும் அர்ச்சனா ஆகியோர் மத்தியில் கொஞ்சம் கடுப்பை கிளப்பியது. அதிலும் குறிப்பாக அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் அடிக்கடி சண்டை மூட்டி கொண்டே.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தால் என்ன கொம்பு முளைத்து விடும் ஒருவர் உடல்நிலை முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை எழுப்பி வேலை வாங்குவீர்களா அடுத்த வாரம் நான் கேப்டனாக வந்தால் அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் பாலாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிலும் குறிப்பாக ரியோ மற்றும் அர்ச்சனா பாலாஜியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அர்ச்சனா, பாலாஜியிடம் ‘நான் தான் இந்த வீட்டின் கேப்டன். இன்னும் 4 நாட்கள் உங்களுக்கு புடிக்கிதோ இல்லையோ நீங்க செஞ்சி தான் ஆகணும்’ என்று கடமையாக பேசி இருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாது உடன் இருந்த ரியோ கூட பாலாஜியை கார்னர் செய்தார். இதையடுத்து பாலாஜி, தனிமையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் பாலாஜிக்கு சிவானி ஆறுதல் கூறுகிறார். அப்போது சம்யுக்தா ‘என்ன ஓகே ஆயிடுச்சா’ என்று கேட்க என்ன ஓகே ஆயிடுச்சா எனக்கு புரியல என்று பாலாஜி கேட்கிறார். அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தியும் எதோ சொல்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்தாள் பாலாஜி மற்றும் சிவானி இருவருக்கும் லவ் ட்ராக் தொடங்கி விடும் என்பது போல தோன்றுகிறது

-விளம்பரம்-
Advertisement