சரியா 4 மணி 5 மணினு போஸ்ட் போட காரணமே இதான் - ஷிவானி அளித்த முதல் பேட்டி. (இது நம்பர மாதிரியா இருக்கு)

By Rajkumar · 20/2/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : Vj கிரேகை விவாகரத்து செய்துவிட்டு இந்த நடிகரை தான் பூஜா திருமணம் செய்து கொண்டாரா.

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார் ஷிவானி, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் ஷிவானி. பிக் பாஸ் பாஸுக்கு பின்னர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தி விட்டார் ஷிவானி.

மேலும், பிக் பாஸுக்கு பின் எந்த பேட்டியிலும் கலந்து கொள்ளாத ஷிவானி முதன் குறையாக Chennai Times வலைத்தளத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது சரியாக 4 மணி 5 மணி என்று புகைப்படங்களை பதிவிட காரணத்தை கேட்ட போது, நான் இரவில் லேட்டாக தூங்கிவிடுவேன். அதனால் எப்போது எழுகிறேனோ அப்போது போஸ்ட் போடுவேன். ஆனால், அது தற்சயலாக அந்த நேரத்தில் அமைந்துவிட்டது. ஆனால், நான் சரியாக நேரத்தை பார்த்து எல்லாம் போஸ்ட போட்டது இல்லை, எதிர்ச்சியாக அமைந்தது தான் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full