சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பூஜா ராமச்சந்திரனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.’SS மியூசிக்’ என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார் பூஜா ராமச்சந்திரன்.
அது தான் ‘காஞ்சனா’ என்ற சீரியல். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பூஜா நடித்த இந்த ‘காஞ்சனா’ எனும் ஹாரர் த்ரில்லர் ஜானர் சீரியல் ஒளிபரப்பானது.அதன் பிறகு சின்னத் திரையுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பூஜா ராமச்சந்திரன், அடுத்ததாக வெள்ளித் திரையிலும் நுழைந்தார். தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் பூஜா ராமச்சந்திரன்.
2010-ஆம் ஆண்டு ‘SS மியூசிக்’ புகழ் VJ க்ரேயிக்கை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.பின்னர் 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பூஜா ராமச்சந்திரன், நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பூஜா இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ள ஜான் வேறு யாரும் இல்லை அவரும் ஒரு நடிகர் தான்.
தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஜித், தமன்னா, நாசர், விதார்த், சிவா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் ரெயில் வே ஸ்டேஷன் சண்டை காட்சியில் நடித்து இருப்பார் ஜான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார். அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தமிழில், அஜித்தின் வீரம், விஷாலின் மதகதராஜா, சிம்பு நடித்த ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.